திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
108 முறை.. 66 வயது சிஇஓவை ஆட்டம் காண வைத்த.. ஆன்ட்டி.. பொறுக்க முடியாமல் போலீசுக்கு போன நபர்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் கூட்டுறவு வங்கியின் ஓய்வு பெற்ற முன்னால் சிஇஓ வசித்து வந்துள்ளார். தற்போது இவருக்கு 66 வயதாகும் நிலையில், இவர் கடந்த 2016-ல் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண் அந்த வங்கிக்கு சென்று இருக்கிறார். அப்போது, அந்தப் பெண் லோன் குறித்த ஆவணங்களை சரிவர வைத்திருக்கவில்லை. மேலும், அந்தப் பெண்ணின் வீட்டில் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே அந்த சிஇஓ பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்தப் பெண் சிஇஓவிடம் தனது மன்மத லீலைகளை அவிழ்த்து விட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதில் மயங்கிய அந்த சிஇஓ பெண்ணிற்கு ₹.3 லட்சம் லோன் வழங்க ஏற்பாடு செய்தார். அதற்குப்பின் ஒரு மாதம் கழித்து அந்த பெண் இருவரும் நெருக்கமாக இருந்த நிர்வாண புகைப்படங்களை அவருக்கு அனுப்பி இந்த புகைப்படங்களை குடும்பத்திற்கு அனுப்பி, உனது குடும்ப வாழ்வை பங்கம் செய்து விடுவேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை அனுப்பாமல் இருக்க வேண்டுமெனில் 8 கோடி ரூபாய் பணம் வேண்டும் என அவர் மிரட்டி இருக்கிறார். இதில் பயந்துபோன சி.இ.ஓ அந்த பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அதன் பின் பலமுறை அந்த பெண் அவரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2023 வரை கிட்டத்தட்ட 108 தவணைகளுக்கும் மேலாக மிரட்டி ₹.4. 39 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய கிக் பாக்சிங் போட்டியில் தங்கத்துடன் திரும்பிய மாணவர்கள்; மேளதாளம் முழங்க வரவேற்பு.!
அப்போதும் அடங்காத அந்த பெண் மீண்டும் மிரட்டி 5 லட்சம் ரூபாய் வேண்டும் என சிஇஓவிடம் கூறியுள்ளார். இதற்கு மேல் முடியாது என்று நினைத்த அந்த சிஇஓ காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 45 வயதுமிக்க அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச்சிதறி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 45 பேர் படுகாயம்.!