நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 38 வயது தொழிலாளி... 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கோர்ட்..!!

ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அவலஹள்ளி பகுதியில் வசித்து வருபவர், கூலி தொழிலாளி கிருஷ்ணப்பா (38). இவர் கடந்த 2014 ஆம் வருடம், அதே பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் கிருஷ்ணப்பா, இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி உள்ளார். ஆனால் சிறுமி தனது தாயிடம் இது பற்றி கூறியுள்ளார் இதனை கேட்ட சிறுமியின் தாய் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த 2015 ஆம் வருடம் கிருஷ்ணப்பா ஜாமீனில் வெளியே வந்தார். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கிருஷ்ணப்பாவுக்கு, 75 ஆயிரம் அபராதமும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்