மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர்... ஆண் குழந்தை இல்லை... 2 வயது மகளை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூர தந்தை... ஜாமீன் எடுக்க... கழுத்தறுத்து படுகொலை.!
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டத்தில் மங்களகிரி என்ற இடத்தில் ஆண் குழந்தை இல்லாததால் தனது மகளை கொடூரமாக கொலை செய்து இருக்கிறார் தந்தை. இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் கொலை செய்த தந்தையின் உறவினரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மங்களகிரி என்ற பகுதியைச் சார்ந்தவர்கள் கோபி மௌனிகா தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கோபிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய நிலையில் அடுத்தடுத்து இரண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் கோபி சில நாட்களுக்கு முன்பு தனது இரண்டு வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்தது காவல்துறை. இந்நிலையில் கோபியை ஜாமினில் எடுப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அவரது உறவினரான சாய் சந்திப். இதற்கு மௌனிகாவின் தந்தை சத்யநாராயணா மற்றும் அவரது சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திப் சத்யநாராயணாவை தள்ளிவிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியநாராயணாவின் மகன் வெங்கடகிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாய் சந்தீப்பின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் மங்களகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறது காவல்துறை.