ஒரு தலை காதல் விவகாரம்.. கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட இளம்பெண்!!



a-one-headed-love-affair-the-young-girl-was-killed-by-s

கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமை, காதலை ஏற்க மறுத்தால் கொலை, முகத்தில் ஆசிட் தெளிப்பது போன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டே உள்ளது.

மும்பை பால்கர் பகுதியில் வசித்து வருபவர் அர்ச்சனா. இவர் கபல்பாடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகர் என்னும் இளைஞர் அர்ச்சனாவை  ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தனது காதலை அர்ச்சனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்துள்ளார்.

one side love

இருப்பினும் அர்ச்சனாவை விடாத பிரபாகர் அவரை திருமணம்  செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அர்ச்சனாவின் பெற்றோரிடம் திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டுள்ளார். ஆனால் அர்ச்சனாவின் பெற்றோர் எங்களுக்கு இதில் சம்மதம் இல்லை என்று கூறி இனி தங்கள் மகளை தொந்தரவு செய்ய கூடாது என்று கண்டித்து இருக்கின்றனர்.

இதனையடுத்து கல்லூரி வாசலில் அர்ச்சனா வரவை எதிர்பார்த்து காத்திருந்த பிரபாகர் அந்த பெண்ணிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பிரபாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ச்சனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் அர்ச்சனா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை தேடி வந்தனர். இந்நிலையில் அர்ச்சனா இறந்ததை அறிந்த பிரபாகர் மொகாடாவில் உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.