மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்நாடகாவில் பரபரப்பு.. பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய சிறுமி.. பரிதாபமாக பலியான சம்பவம்..!
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிச்சனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் சுவாமி - உமா தம்பதியினர். இவர்களுக்கு ரஷா என்று மகள் உள்ளார். இவர் கனகபுறாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து ரஷா பள்ளி வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிச்சனஹள்ளி அருகே வேன் வந்து கொண்டிருந்த போது வேனின் கதவு திறந்துள்ளது. இதனை கவனிக்காத வேன் ஓட்டுநர் வேனை வளைவில் வேகமாக திருப்பி உள்ளார். அப்போது படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ரஷா யாரும் எதிர்பாராத நேரத்தில் வேனில் இருந்து சாலையில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் ரஷா கீழே விழுந்ததை அறியாத வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியபோது வேனின் பின் சக்கரம் ரஷா மீது ஏறி இறங்கியது. இதில் ரஷா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.