#Breaking: உடைந்தது இண்டியா கூட்டணி; முதல் ஆளாக அறிவித்த முக்கிய கட்சி.!
2024 மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் திமுக, ஆம் ஆத்மீ, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் முடிவுகளின்படி இக்கூட்டணி 240 தொகுதிகளை கைப்பற்றியது. அக்கட்சி மீண்டும் 3வது முறையாக எதிர்க்கட்சியாக மக்களவையில் பயணத்தை தொடருகிறது.
டெல்லிக்கு கடும் போட்டி
டெல்லி மாநிலத்தில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி, டெல்லியை தன்வசப்படுத்திய ஆம் ஆத்மீ கட்சி, அதனைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மீ இடையே கடுமையான போட்டி என்பது நிலவி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவை பாஜக ஆண்டாலும், தலைநகர் டெல்லியின் நிலை என்பது ஆம் ஆத்மீ வசம் இருந்தது.
கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே
இதனிடையே, நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் 2024 ல் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மீ கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், இந்த கூட்டணி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வரை தொடரும் என கூறப்பட்டது. ஆனால், இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள அம்மாநில ஆம் ஆத்மீ அமைச்சர் கோபால் ராய், டெல்லியில் மாநில அளவில் ஆம் ஆத்மீ தனியே நின்று போராடும். காங்கிரசுடன் கூட்டணி என்பது பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே. சட்டப்பேரவை தேர்தலில் அவர்களை இணைத்துக்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!
இதனால் காங்கிரஸ் - ஆம் ஆத்மீ கூட்டணி பாராளுமன்ற தேர்தலுடன் நிறைவு பெற்று தற்போது உடைந்ததாக வருணிக்கப்படுகிறது. 2025 பிப்ரவரி மாதம் டெல்லி மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மோடி பிரதாரமானால் மொட்டையடிக்கிறேன்" - எதிர்க்கட்சி வேட்பாளர் அறைகூவல்..!