"2000 ரூபாய் நோட்டு, இனி செல்லாது" பிரபல நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால், கஸ்டமர்கள் அதிர்ச்சி.!
இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. எனவே, 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து வேறு பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வரும் நிலையில் இதற்கான பணிகளை மேற்கொள்ள வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
அமேசான் வர்த்தக தளத்தில் கஸ்டமர்கள் பொருள்களை வாங்கும் போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்சன் மூலமாக பொருளை வாங்கும் போது பணத்தை கொடுக்க முடியும். இதுபோல கேஷ் ஆன் டெலிவரி செய்யப்படும் போது 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் கொடுத்தால் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு பின் வாங்க மாட்டோம். செல்லாது" என்று அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.