திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நூலிழையில் உயிர்தப்பிய அமித் ஷா; கட்டுப்பாட்டை இழந்து பதறவைத்த ஹெலிகாப்டர்..! அதிர்ச்சி காட்சிகள்.!
2024 மக்களவை தேர்தலில் வெற்றிபெற, மத்தியில் ஆளும் பாஜக தனது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில், முதல் இரண்டு கட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. எஞ்சிய ஐந்துகட்ட தேர்தலும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.
பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது தீவிர பரபரப்புரை பயணத்தை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசாரை மாவட்டத்தில் நடந்த பரப்புரை பயணத்தில் அவர் கலந்துகொண்டார்.
பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் அவர் பயணத்தை தொடங்க, மேலெழும்பிய ஹெலிகாப்டர் ஒருகணம் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டது. பின் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த விமானி, தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்கி சென்றார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Begusarai, Bihar: Home Minister Amit Shah's Narrow Escape as Chopper Briefly Loses Control pic.twitter.com/jjM470qi4H
— IANS (@ians_india) April 29, 2024