Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
#LokSabha: "ஓட்டுக்காக வரவில்லை உங்க ஆசீர்வாதம் போதும்"! முதியோர் இல்லத்தில் கண் கலங்கிய அண்ணாமலை.!!
2024 ஆம் வருட பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 12 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. தேர்தல் பரப்புரைக்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக போராடி வருகிறது. இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களான அண்ணாமலை முருகன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் கோயம்புத்தூர் நீலகிரி மற்றும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் எப்படியாவது ஒரு பாராளுமன்ற தொகுதியை வென்று விட வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கோயமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு முன்பாக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் இன்றைய பிரச்சாரத்தின் போது கோவை முதியோர் இல்லத்திற்கு சென்ற அண்ணாமலை நான் இங்கு வாக்கு கேட்க வரவில்லை உங்களிடம் ஆசி வாங்க வந்தேன் என கூறினார். முதியோரின் அன்பு தன்னை கண்கலங்க வைப்பதாக தெரிவித்தார்.
தான் பிரச்சாரத்திற்கு சென்ற போது முதியோர் 2 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் காத்திருந்ததாக கூறினார். இந்த அன்பு தான் இந்தியாவை 450 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைக்கு எடுத்துச் செல்லும் என தெரிவித்தார். இந்தியா உலகின் தலைசிறந்த இடத்திற்குச் செல்லும் அது காலத்தின் கட்டாயம் எனவும் கூறினார் அண்ணாமலை.