இந்தியாவில் இப்படியும் ஒரு கொடுமையா?...தினமும் ஆபத்தான பயணத்தில் பள்ளி சிறார்கள்.



assam---pisvanth---school-children

உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது 
இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை அளிக்கக்கூடியது.  இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறை, வணிகம், போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் இந்தியாவின் ஒரு பகுதி உண்மையிலேயே இன்னும் வறுமையிலேயே வாடிக்கொண்டிருக்கிறது என்பது தற்பொழுது நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Tamil Spark

அசாம் மாநிலத்தில் உள்ள பிஸ்வந்த் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும்  பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் தினம் தினம் ஆபத்தான பயணத்தில்  பயணம் செய்து கல்வி கற்கும் அவலம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது மாணவர்கள் வீடுகளில் உபயோகப்படுத்தும் ஈய பாத்திரங்களை ஆற்றில் மிதக்கவிட்டு அப்பாத்திரங்களில் ஏரி அமர்ந்து கொண்டு பள்ளிக்கு சென்று,  திரும்பவும் அதே பயணத்தில் வீடு திரும்புகின்றனர்.