தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
100 கோடி கடன் குறைந்த வட்டிக்கு தாறோம்.. இனிக்க பேசி, புளிப்பு மிட்டாய் கொடுத்த கும்பல்.!
கன்னட-ஆந்திர தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்களில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சார்ந்தவர் மந்தீனா வருண்காந்தி. இவர் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரது மாமா கிருஷ்ண ராஜ். இவர் ஆந்திர பிரதேசத்தில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர்களுக்கு தொழில் முதலீடு காரணமாக பணம் தேவைப்பட்டுள்ளது. பணத்தேவைக்காக அலைந்துகொண்டு இருக்கையில், 2 பேரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் உள்ள சர்வதேச நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணராஜ் பெங்களூருக்கு வந்துவிடவே, கடந்த 1 ஆம் தேதி எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு கிருஷ்ணராஜ் மற்றும் மந்தீனா வருண்காந்தியை இருவரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு, நிதி நிறுவன அதிகாரியாக இருந்த கதிர்வேலன் என்பவர், ரூ.100 கோடி கடன் தருகிறோம் என்றும், 3 மாத வட்டியை அதற்கு முன்பணமாக தற்போது செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த இருவரும், மறுநாளான 2 ஆம் தேதியே 3 மாத வட்டிக்கான தொகையாக ரூ.1.80 கோடி பணத்தை செலுத்த திட்டமிட்டு, தனது இரண்டு வங்கிக்கணக்கு வாயிலாக நிறுவனம் தெரிவித்த வங்கிக்கணக்கில் கிருஷ்ணராஜ் ரூ.90 இலட்சம் வீதம் பணத்தை செலுத்தியுள்ளார். இதன்பின்னர், 3 நாட்களில் ரூ.100 கோடி கடன் வந்துவிடும் என கதிர்வேலன் உட்பட 2 பேர் தெரிவித்துள்ளனர். 3 நாட்கள் கழித்தும் பணம் வராததால், நேரில் நிறுவனத்திற்கு செல்லாமல் என சென்ற நேரத்தில், நிறுவனம் பூட்டி இருந்துள்ளது.
கிருஷ்ணராஜ் கதிர்வேலனுக்கு தொடர்பு கொள்கையில், அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்து இருந்துள்ளது. மந்தீனா வருண்காந்தியிடம் அறிமுகமான 2 பேரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இறுதியில் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த கிருஷ்ண ராஜ் மற்றும் வருண் காந்தி, அங்குள்ள எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் கதிர்வேலன் மற்றும் 2 பெண்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில், வழக்கில் தொடர்பிருந்தது தலைமறைவாகியுள்ள மர்ம நபர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இவர்களில் கைதான கதிர்வேலன் தமிழ்நாட்டினை சார்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.