மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் வயதினரை குறிவைக்கும் புற்றுநோய்; வெளியான அதிர்ச்சி தகவல்.!!
ஒரு காலத்தில் வயது கூடிய நபர்களுக்கு ஏற்பட்டு வந்த பல விதமான நோய்களும் தற்போது இளம் வயதுடைய நபர்களுக்கு அதிகம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் 80 வயதை கடந்து மாரடைப்பால் இறந்தவர்கள் என்ற நிலை மாறி, இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.
புற்றுநோய்க்கு முக்கிய காரணம்
இதற்கு முக்கிய காரணமாக மாறிவந்த உணவு உட்கொள்ளும் முறை மற்றும் புகையிலை உட்பட பிற போதைப் பொருட்களை பயன்படுத்துவதே என கூறப்படுகிறது. கேன்சர் முக்த் பாரத் என்ற தனியார் அறக்கட்டளை மூலம் கேன்சர் தொடர்பான உதவி மையத்தை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை சமீப காலமாகவே அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு., தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!
ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் 20 விழுக்காடு நபர்கள் தங்களின் நோய்க்குறித்த இரண்டாவது பரிசோதனையில் புற்றுநோய் குறித்த தகவலை உறுதி செய்கின்றனர். இவர்கள் 40 வயதிற்குட்பட்ட நபர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் ஆய்வின் மூலமாக உறுதியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் 15ஆம் தேதி வரையில் மட்டும் இந்த அமைப்புக்கு 1368 அழைப்புகள் வந்துள்ளன.
இதையும் படிங்க: "நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!