பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை! தயவு செய்து பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
கர்நாடக மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாராம் ஒன்றை அமைத்து மகேஷ் - நீலவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையில் நீலவேணி தனது சகோதரி மகளான வனிதா என்ற குழந்தையையும் வளர்த்து வந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று பசியால் வாடிய குழந்தை மண்ணை சாப்பிட்டதில் வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது. இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லாமல் அக்குழந்தையின் உடலை பெற்றோர் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே புதைத்துள்ளனர்.
இதேபோல் கடந்த ஆண்டும் நீலவேணியின் மகனும் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி காவல் ஆய்வாளர், மீதமுள்ள குழந்தைகள் நான்கு பேரையும் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
உன்ன உணவு இன்றி நம் நாட்டில் உயிர்பலி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தயவு செய்து உணவை வீணாக்காதீர்கள். அதிக பணம் உள்ளோர் உணவு வீணாவதை கண்டுகொள்வதில்லை. ஹோட்டலில் சென்று சாப்பிடுவோர்களுக்கு உணவு சாப்பிடமுடியாமல் மீதப்பட்டால் அப்படியே வீணாக்குகின்றனர்.
ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடும் செல்லும் வழியில் ஏராளமானோர் உண்ண உணவின்றி சாலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள் அவர்களிடம் மீதப்பட்ட உணவை கொடுத்தால் அவர்கள் ஆனந்தமாய் சாப்பிட்டு பசி ஆற்றியிருப்பார்கள். தயவு செய்து மீதப்பட்ட உணவை யாரும் வீணாக்காதீர்கள். இதுகுறித்து அனைவரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.