இரண்டாவது அலையாக பரவும் கொரோனா.! பள்ளிகளை தற்போது மீண்டும் திறக்க வாய்ப்பு இல்லை.!
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பள்ளிகளை திறப்பது தொடர்பான முடிவுகளை அந்தந்த கல்வி நிலைய நிர்வாகங்களிடன் கலந்தாலோசித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறந்து கொரோனா பாதிப்பால் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தும் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை மூட அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஒடிசாவில், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக டிசம்பர் 31-ந்தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது. ஆனால் தேர்வுகள் நடத்துவதற்கும், ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி நடத்துவதற்கும், பிற நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒடிசா பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.