தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனா எதிரொலியாக மராட்டிய முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியுதவி! சாய்பாபா அறக்கட்டளை!
சீனாவில் தொடங்கிய கொரோனோ இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ல் இருந்து 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு மத்திய ரிசர்வ் போலீசார் ரூ.33.81 கோடி நிதியுதவி வழங்கினர். இதற்காக அனைத்து போலீசாரும் ஒரு நாள் ஊதிய தொகையை வழங்குவது என ஒட்டுமொத்த ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மராட்டிய முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைப்பு ரூ.51 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கொரோனாவை தடுக்க ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்து வருகிறது.