மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு பார்ட்டி முடித்து வந்த இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை: பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், ஜகவர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் மற்றும் அவரது நண்பர் இருவரும் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராஜ்குமார் மற்றும் சுதா ஆகியோர் இரவு நேர பார்ட்டியை முடித்து சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் அவர்களின் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
#Jaipur hit-and-run: Couple crushed by car after party;
— Mirror Now (@MirrorNow) December 27, 2023
girl dies. CCTV captures incident. Accused fled after a verbal spat. Victim rushed to hospital; succumbs. Initial probe suggests attack with a baseball bat.@singhmeansit shares more details. pic.twitter.com/gvrSgccWZF
அங்கு பெண்மணியின் உயிரிழப்பு உறுதி செய்யப்படவே, அவரின் நண்பருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கார் ஓட்டுநர் மீது விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட சமயத்தில் கார் ஓட்டுனரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.