திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆடுகளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் வெற்றி.! பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சாதனை!!
2021 ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பின்னர் அரசியலில் களமிறங்கி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (All Indian Trinamool Congress) சார்பாக மேற்கு வங்காளம் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர்
அவர் 1999 முதல் மேற்குவங்கம் பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி வேட்பாளராக இருந்துவரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நிர்மல் குமார் சஹா ஆகியோரை எதிர்த்து தேர்தலில் நின்றார். இந்த நிலையில் இன்று தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருமண விழாவிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.! பரிதாபமாக பறிபோன 13 உயிர்கள்!!
யூசுப் பதான் வெற்றி
இந்த நிலையில் கிரிக்கெட்டில் பல சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை விட அதிகளவில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!