திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமண விழாவிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.! பரிதாபமாக பறிபோன 13 உயிர்கள்!!
ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டம் குமால்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 50 பேர் நேற்று இரவு டிராக்டர் ட்ராலியில் சென்றுள்ளனர். இந்நிலையில் ராய்கரில் உள்ள பிப்லோடி என்ற கிராமத்திற்கு அருகே வாகனம் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் வேகமாக சென்று வாகனம் கவிழ்த்துள்ளது.
கவிழ்ந்த டிராக்டர் ட்ராலி
தொடர்ந்து இந்த கோரவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் உதவியுடன் டிராக்டர் ட்ராலியின் அடியில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் டிராக்டர் ட்ராலியின் அடியில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லாரி மீது மோதி அப்பளம்போல நொறுங்கிய டெம்போ.. 6 பேரின் உயிரை குடித்த விபத்தின் அதிர்ச்சி காட்சிகள்.!
13 பேர் உயிரிழப்பு
மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனராம். இருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும், இனி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: வாகனத்தின் பின்புறம் தொங்கியவாறு சாகசம்; இளைஞர் தலையில் காயம்பட்டு துள்ளத்துடிக்க பலி.!