#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; ஆந்திரா-ஒடிஷாவை வெளுக்கப்போகும் மழை.!

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஏற்கனவே இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இன்று குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வங்க கடல் பகுதியில் உருவாகி வரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திரா-ஒடிசாவை ஒட்டி உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.