ஆத்தாடி.. திடீரென அதிகரித்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!



cylinder rate increased

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. 

எண்ணைப்பொருட்களின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை என்ற நிலை மாறி, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இரண்டு முறைக்கு மேல் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் இந்த கொரோனா சமயத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இதுவரை ரூ.825.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூபாய் 25 உயர்த்தப்பட்டு ரூ.850.50ஆக என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

cylinder

 இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.850.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 காசுகள் விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.