தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அடக்கொடுமையே.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொல்லை! பூனைக்கடிக்கு தடுப்பூசி போட சென்ற பெண்ணுக்கு காத்திருந்த மற்றொரு துயரம்!!
கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை பெருமளவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெரு நாய் கடித்து அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பூனைக் கடித்து தடுப்பூசி போட சென்ற பெண்ணை தெரு நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் அபர்னா. 31 வயது நிறைந்த இவரை பூனை கடித்த நிலையில் அவர் தடுப்பூசி போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் 3வது தடுப்பூசி போடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
அங்கு அவர் மருத்துவமனையின் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, அங்கு கீழே படுத்திருந்த நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென அபர்னாவை கடித்துள்ளது. இந்நிலையில் அபர்ணா அலறி கத்தியுள்ளார். பின்னர் பெரும் அச்சமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் பொதுநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதால் இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.