மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video: காலி பிளாஸ்டிக் கேனை சாப்பிடும் யானை.. மலைவழிப்போக்கர்களே அலட்சியம் வேண்டாம்., பாவம் யானைகள்.!
மலைப்பிரதேசங்களில் வனவிலங்குகள் மிகுந்து காணப்படுகின்றன. இவை வனங்களையொட்டி மனிதர்களால் அமைக்கப்பட்ட சாலைகளையும் தனது வழிப்பாதை என்பதில் இருந்து மறவாமல் உபயோகம் செய்து வருகின்றன. அப்போது, மனிதர்களால் வழங்கப்படும் உணவுகளை சில நேரம் சாப்பிடுவது வழக்கம்.
மனிதர்கள் விலங்குகளுக்கு தேவையான உணவுகளை வழங்காமல் தங்களின் சிற்றுண்டியையும் கொடுத்து சாப்பிட பழக்குவது, அதனுடன் அன்புடன் பழக செல்கிறேன் என்ற பெயரில் அதனை அச்சுறுத்தி மனிதரை தாக்க நிர்பந்திப்பது போன்ற செயல்களால் வனத்துறை இத்தகைய நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டது.
மேலும், வனவிலங்குகளுக்கு எவ்வித உணவுகளும் வழங்க கூடாது. மீறி உணவளிக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போதைய நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் அரசும் இருக்கிறது, மக்களும் இருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில் யானை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்து சாப்பிடுகிறது. இதனைக்கண்ட வழிப்போக்கர் விடியோவாக பதிவு செய்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். காட்டுவழியே பயணம் செய்வோர் விலங்குகளுக்கு தீங்கு இழைக்காத வண்ணம் செல்ல வேண்டும்.
நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வாயால் கூறி கதறியழுது மருத்துவமனைக்கு சென்றிடுவோம். யானைகள் வலியால் பிளிறி அழுதாலும், அதனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகவும் கடினம். காட்டுக்குள் தனியே அழுது மடிந்துவிடும். அத்தகைய நிலைக்கு அதனை தள்ளாமல் இருக்க உறுதுணையாக இருங்கள்..