வீர‌மரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அரசு ஒதுக்கிய வீட்டில் தங்குவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!



Extended days for died army man family

இந்திய ராணுவப் படைகளில்
வீர‌மரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அரசு ஒதுக்கிய வீட்டில் ஓராண்டு வரை வசிக்கலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவப் படைகளில் பணியாற்றி வரும் வீரர்களின் குடும்பத்தினர் தற்போதைய விதிமுறைகளின்படி எதிரிப்படைகளுக்கு எதிரான தாக்குதலின்போதோ அல்லது எதிரிகளின் தாக்குதலிலோ உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து அரசு குடியிருப்புகளில் வசிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனை மாற்றி தாக்குதலில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர் அரசு குடியிருப்புகளில் தற்போது ஓராண்டு வரை இருக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Rajnath sing

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், போரில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினர் அரசு குடியிருப்புகளில் தொடர்ந்து வசிப்பதற்கான கால அவகாசத்தை, தற்போதைய மூன்று மாதங்களில் இருந்து ஓராண்டாக நீட்டிக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி  ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.