ஆடையின்றி சாலையில் நடந்துச்சென்ற மர்ம உருவம்.! வைரலான வீடியோ.. விசாரணையில் வெளிவந்த உண்மை தகவல்..



Fact check about alien roaming on road side

ஜார்க்கண்டில் ஒரு சாலையில் நடந்து சென்றது ஏலியன் என சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவிய நிலையில், அந்த வீடியோ குறித்த உண்மையான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள சாலையில் வித்தியாசமான உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தளத்தில் வைரலாகி வந்தது. வீடியோவை பார்த்த பலரும் அது ஒரு ஏலியனாக இருக்கலாம் எனவும், அல்லது பேயாக இருக்கலாம் எனவும் கூறிவந்தனர்.

இதனால் அந்த வீடியோ குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் அதிகரித்தநிலையில், அந்த வீடியோ குறித்த ஆராய்ச்சியில் அதிகாரிகள் இறங்கினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் நடந்து சென்ற உருவம் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தவழியாக சாலையில் பைக்கில் சென்ற இளையர்கள் இது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என உறுதிசெய்துள்ளனர்.மேலும் அந்த வீடியோ ஹாசாரிபாக்கில் எடுக்கபட்டவில்லை. கர்சாவான் மாவட்டத்தில் உள்ள செரைகேலா பகுதியில் இரண்டு இளையர்கள் அந்த வீடியோவை பதிவுசெய்தனர் என்று கண்டுடிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு இளையர் பெயர் தீபக் எனவும், அவர் சக்ராதர்பூரில் ஒரு இறுதிசடங்கிற்கு சென்று செரைகலாவுக்கு கர்சாவன் வழியாக வந்துகொண்டிருந்த போது இந்த வீடியோ எடுத்ததாகவும், முதலில் பேய் என பயந்து அலறி கூச்சலிட்டதாகவும் பின் தான் அது பெண் ஒருவர் போல் அடையாளம் தெரிந்து கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.