மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகரின் வீடு வெள்ளத்தில் மூழ்கியது!. வெள்ளத்தில் சிக்கிய நடிகரின் தாயை வித்யாசமான முறையில் மீட்டனர்!.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ள காரணத்தால் இதுவரை வெள்ளத்தில் சிக்கி 75 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத் தில் மிதக்கின்றன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் கேரள மாநிலத்திற்கு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ப்ரித்விராஜின் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. ப்ரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. அவர் வீடு வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
ப்ரித்விராஜின் அம்மாவும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.