தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விவசாயிகள் தங்கள் வேலைகளை செய்ய தடையில்லை.. வெளியானது அரசின் புதிய அறிவிப்பு!
உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டிலேயே இருக்க ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் வணிகத்திற்கு மட்டும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தவிர பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கூடங்கள் போன்றவைகள் முற்றிலும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் நிலை குறித்து பலருக்கும் கவலை ஏற்பட்டது. அறுவடைக்கு தயாரான பயிற்களை தக்க சமயத்தில் அறுவடை செய்யாவிட்டாலும் சரியான பருவகாலத்தில் பயிரிடவில்லையென்றாலும் ஏற்கனவே பயிரிட்டவைகளை பராமரிக்காமல் விட்டாலும் பாதிப்பு வெறும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல.
காரணம் மக்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் கடவுள் தான் விவசாயிகள். விவசாயிகளின் சக்கரம் சுழலவில்லையெனில் மக்கள் உணவுக்காக திண்டாட வேண்டியது தான். இதன் உண்மைத்தன்மை இப்போது நிச்சயம் அனைவருக்கும் புரியவரும்.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு தற்போது விவசாயிகள் தங்கள் வேலைகளான பயிரிடுதல் அறுவடை ஆகியவற்றை தொடர்ந்து செய்யலாம் என அனுமதி அளித்துள்ளது. விவசாயம் அத்தியாவசிய தொழிலில் வருவதால் அந்த தொழிலுக்கு தேவையான பொருட்களை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் வீட்டிற்குள்ளே இருந்தாலும் மனிதர்களாகிய நாம் உயிர் வாழ மிகவும் அவசியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை என்றும் போற்றுவோம். விவசாயிகள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கைவைக்க முடியாது என்பதை உணர்வோம்.