Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!. மனைவி எடுத்த அதிரடி முடிவு!.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்தவர் சதாசிவன் ரெட்டி என்பவருக்கும் ஷோபா என்ற பெண்ணுக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார்.
சதாசிவன் ரெட்டி திருமணமான 5 வருடங்களில் மதுவுக்கு அடிமையாகி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சில நேரத்தில் வேறு பெண்ணுடன் தங்கிய சதாசிவன் மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்து ஷோபா மற்றும் அவரின் மகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷோபா வீட்டுக்கு வந்த சதாசிவன், பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷோபா மகளை காப்பாற்ற, சதாசிவத்தை மரக்கட்டையால் அடித்துள்ளார். போதையில் இருந்த சதாசிவன் ரெட்டி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சதாசிவன் சடலத்தை கைப்பற்றி, இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.