மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9 பேரை கொலை செய்து மனித இரத்தம் கேட்ட புலி சுட்டுப்பிடிப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!
பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பரான் மாவட்டம், பகஹா கிராமத்தில் ஆட்கொல்லி புலி மக்களை வாட்டி வதைத்து வந்துள்ளது. இரவு வேளைகளில் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் புகுந்துகொள்ளும் புலி கால்நடைகளை கொன்று சாப்பிடுவது என இருந்து வந்துள்ளது.
ஒருகட்டத்திற்கு மேல் மக்களை குறிவைத்து தாக்கி மாமிசம் உண்டு வந்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புலியின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கடந்த 3 நாட்களுக்குள் 4 பேர் என மொத்தமாக சமீபத்தில் 9 பேரை புலி கடித்து கொலை செய்துள்ளது. இதனால் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புலியின் நடமாட்டம் இன்று கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அப்புலியை வனத்துறையினர் சுட்டு பிடித்தனர். புலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.