குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
2 பியருக்கு ஆசைப்பட்டு ரூ.45,000 இழந்த வழக்கறிஞர்.. இப்படியும் ஏமாற்றும் கும்பல்..! குடிமகன்களே உஷார்..!!
குறைவான விலையில் பியர் தருவதாக கூறி வழக்கறிஞரிடம் ரூ.45,000 ஏமாற்றிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வரும் வழக்கறிஞர் ஒருவர் மது அருந்துவதற்கு இணைய வழியில் ரூபாய் ரூ.360-க்கு 2 பியர் ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது அவரை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், பியரின் விலை கூடுதலாக இருக்கிறது என்று கூறி, தான் வாட்ஸ்அப்பில் QR Code அனுப்புவதாக தெரிவித்து அதில் பணம் செலுத்த கோரிக்கை வைத்துள்ளார்.
மோசடி நபரின் பின்புலத்தை அறியாத வழக்கறிஞரும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய Code-ஐ கிளிக் செய்யவே, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.44,782 ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வழக்கறிஞர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.