மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமையல் எரிவாயு விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி..!
மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களால், எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
அந்த வகையில் கடந்த பல மாதங்களாக ஆயிரத்தை கடந்து இருந்த வீட்டு சமையல் எரிவாயு விலை, மத்திய அரசின் முயற்சியால் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் வீட்டு சமையல் எரிவாயு விலை ரூ.918க்கு விற்கப்படும்.
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த மாதம் ரூ.157 விலை குறைக்கப்பட்ட சிலிண்டர், இம்மாதம் ரூ.203 உயர்த்தி ரூ.1695ல் இருந்து ரூ.1898க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாத விலையே வீட்டு பயன்பாட்டு சிலிண்டருக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேவேளையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை என்பது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது வணிக ரீதியான சிலிண்டரை பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.