"சபரிமலைக்கு பெண்கள் அனுமதி" வழக்கின் பிண்ணனியும்.. தீர்ப்பின் காரணங்களும்..!



Girls allowed to sabarimala

கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இடிமுடி கட்டி பாதையாத்திரையாக செல்வது வழக்கம். எந்த சாதி பாகுபாடின்றி அனைவரும் அங்கு சென்று அய்யப்பனை தரிசிக்கலாம். 

Sabarimala devotees

அய்யப்பன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை இந்தக்களுக்கு அதிகம். ஆனால் அப்படிப்பட்ட அய்யப்பனை தரிசனம் செய்ய இது நாள் வரை எந்த பெண்களையும் அனுமதித்தது இல்லை கோவில் நிர்வாகம். இதற்கு பல தரப்பினரும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். 

சிலர் கூறுகையில், அய்யப்பன் கன்னி கலையாத புனிதமானவர். இந்த நிலையில் அவர் சபரிமலையில் தவம் புரிவதால் தான் அவரால் பக்தர்களுக்கு வேண்டிய அருள் வளங்களை அளிக்கமுடிகிறது. அய்யப்பனை காண வயதிற்கு வந்த பெண்கள் சென்றால் அவரது தவத்திற்கு இடையூறு உண்டாகும் எனவும் அதனால் அய்யப்பனின் சக்தி குறைந்துவிடும் எனவும் கூறி வருகின்றனர். 

Sabarimala devotees

ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சபரிமலை கோவிலுக்குள் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் வெளியிடப்பட்டது. 

Sabarimala devotees

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோர் இணைந்து ஒரு தீர்ப்பும், நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய மூவரும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர்.

தீபக் மிஸ்ரா, கன்வில்கர் தீர்ப்பில், "ஆண்களும், பெண்களும் சம அளவில் நடத்தப்பட வேண்டும். பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்கள் பலவீனமாக நடத்தப்படக்கூடாது. பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கோவில்களில் அவர்கள் வழிபடுவதற்கு பாகுபாடு காட்டக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மற்ற நீதிபதிகளான நாரிமன், சந்திரசூட் ஆமோதித்துள்ளனர்.

Sabarimala devotees

இறுதியில், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.

தீர்ப்பு வெளியாகிவிட்டது ஆனால் நடைமுறையில் இது எப்படி சாத்தியம் ஆகப் போகிறது என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். எது நடந்தாலும் நல்லதா நடந்தா சரி.