பகவத்கீதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!



Gujarat school education ministry order Bhagavad Gita

பகவத்கீதையில் உள்ள கூற்றுகளை அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க குஜராத் மாநில பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. 

மாணவர்கள் பள்ளியில் பயிலும் போதே இந்திய வரலாறு, அறிவியல், நன்னடத்தை போன்றவைகளை உணரும் பொருட்டு இது சேர்க்கப்படுகிறது என்றும், ஒலி-ஒளி வகையில் மாணவர்கள் பகவத் கீதை படிக்கும் வகையில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முதலில் மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு, பின்னர் பகவத்கீதையை அனைவரும் பயிலும் வகையில் கட்டுரை, நாடகம் என போட்டிகள் மூலமாக கற்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குஜராத் மாநில பள்ளி கல்வித்துறையின் இம்முடிவுக்கு, அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.