காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
24 மணிநேரம் அரபிக்கடலில் மரக்கட்டையை பிடித்து உயிரை காப்பாற்றிய சிறுவன்: விநாயகர் சதுர்த்தி சுவாரசியம்.!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கோதாத்ரா பகுதியைச் சார்ந்தவர் லஹான் தேவிபுஜக் (வயது 14). விநாயகர் சதுர்த்தி இறுதிப் பண்டிகையின் போது, கடலில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் விடப்பட்ட நிலையில், அதனை வேடிக்கை பார்க்க சென்ற தேவிபுஜக் கடலின் பிடியில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
சுதாரித்த அவர் அதிர்ஷ்டவசமாக மரக்கட்டை மீது ஏறி படுத்து மிதந்து தப்பி இருக்கிறார். விநாயகர் சிலைகளை கரைக்க பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகளை பிடித்து, கிட்டத்தட்ட 24 மணி நேரம் அரபிக் கடல் பகுதியில் கடலில் மிதந்து உயிருக்கு போராடி இருக்கிறார்.
அச்சயம் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நவுசாரி பகுதியை சேர்ந்த ரஷித் தண்டல் என்ற மீனவர், சிறுவனை பத்திரமாக அவரை மீட்டு இருக்கிறார். பின் உடனடியாக கரைக்கு திரும்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்திருக்கிறார்.
சிறுவன் கடலோரத்தில் இருந்து 18 நாட்டிகல் மைல் தொலைவில் கண்டறியப்பட்டான். இந்த நிகழ்வு தற்போது தெரியவந்து பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.