திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூர சம்பவம்..! 3 வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள்.. 200 முறை கடிவாங்கி துடி துடித்து உயிரிழந்த குழந்தை..!
உத்திரபிரதேச மாநிலம் பரேலி சிபிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 3 வயது குழந்தை ஒன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சூழ்ந்த 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அந்த குழந்தையை கடித்துக் குதறி உள்ளது.
இந்நிலையில் குழந்தையின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று நாய்களை துரத்தி விட்டு குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் நாய்கள் குதறியதால் அந்த குழந்தையின் உடம்பில் 200க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாய் கடித்து 3 வயது குழந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.