மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் நாடகமாடிய மனைவி - கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?
மகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்தவர் பிரமோத் பதான்கர் - தீப்தி தம்பதியினர்.இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒருநாள் மனைவி தீப்திக்கு உத்தவ் பஜான்கர் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கணவருக்கு தெரிய வரவே, கணவர் மனைவியை கண்டித்துள்ளார்.இந்நிலையில் திடீரென ஒருநாள் பிரமோத் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
பிரமோத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பிரமோத் படுத்திருந்த தலையணைக்கு கீழே ஆணுறைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.மேலும் அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பிரமோத் அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரமோத் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி தான் கணவரை கொலை செய்துள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது தீப்தி கூறியதாவது: தன் கணவருக்கு கள்ள தொடர்பு விபரம் தெரிய வரவே அவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து தானும் தன் காதலனுமான உத்தவ் பஜான்கர் இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க கணவர் அருந்திய டீ கப்பில் லிப்ஸ்டிக் மூலம் உதடு வடிவத்தை வரைந்து, ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து தனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் நடனமாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீப்தியையும், உத்தவ் பஜான்கரையும் கைது செய்துள்ளனர்.