53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்... 6 வயது சிறுமி படுகொலை.!! 3 பெண்கள் வெறி செயல்.!!
ஆந்திர மாநிலத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பெண்களை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் வாங்கிய அண்டை வீட்டுப் பெண்
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள உபேதுல்லா காலணியில் அஸ்மத்துல்லா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சானியா என்ற மனைவியும் அஸ்வியா என்ற 6 வயது மகளும் இருந்தனர். இவர் தங்கள் காலனியில் இருக்கும் மக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்திருக்கிறார்.
சடலமாக மீட்கப்பட்ட மகள்
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அஸ்வியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சித்தூர் மாவட்ட டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: நாக்பூரில் திடீர் தாக்குதல்... பரிதாபமாக பலியான தமிழர்கள்.!! கொடூர சம்பவம்.!!
சிக்கிய குற்றவாளிகள்
காவல்துறையின் விசாரணையில் 3 பெண்கள் சேர்ந்து சிறுமியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்மத்துல்லாவிடம் கடன் வாங்கிய பெண் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது உறவினர்களுடன் சேர்ந்து சிறுமியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஸ்மத்துல்லா தொடர்ந்து அந்த பெண்ணிடம் கடன் தொகையை திருப்பி கேட்டதால் அவரது மகளை திட்டம் போட்டு கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அசடுவழியும் ஆண்களே டார்கெட்.. நிர்வாண படமெடுத்து பணம்பறித்த 27 வயது பெண் கைது.!