மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் ஜோடிகளுக்குள் சண்டை.. மணிக்கட்டை அறுத்த காதலி., மாரடைப்பில் பலியான காதலன்.! பகீர் சம்பவம்.!
காதலியை காப்பாற்றிவிட்டு, காதலன் பதற்றத்தில் மாரடைப்பு வந்து பலியான சோகம் அதிர்ச்சியை தந்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஜகத்புரி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு, கடந்த ஆண்டு அர்ஜுன் என்ற இளைஞரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: அந்த விசயத்திற்கு கணவர் எதிர்ப்பு.. உணவில் வேளை காட்டிய மனைவி.. அம்பலப்படுத்திய மகள்.! உறக்கத்திலேயே பிரிந்த உயிர்.!
மேலும், அவ்வப்போது காதல் ஜோடி நேரில் சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளது. சிறுமி எதிர்காலத்தில் சட்டத்துறையில் படிக்க இருந்ததாக கூறப்படுகிறது. அவரின் காதலரான அர்ஜுன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைகளை தேடிக்கொண்டு இருந்துள்ளார்.
கை மணிக்கட்டை அறுத்த காதலி
இதனிடையே, வெள்ளிக்கிழமை அன்று காதல் ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு 11:30 மணியளவில் சிறுமி காதலரிடம் வாக்குவாதம் செய்ய தொடங்கியுள்ளார். இதனிடையே, நள்ளிரவு 1 மணிக்கு மேல் தனது கைகளில் மணிக்கட்டை அறுத்து காதலருக்கு வாட்சப்பில் அனுப்பி இருக்கிறார். இதனைக்கண்டு பதறிபோனவர், உடனடியாக சிறுமியின் அம்மாவுக்கு தொடர்பு கொண்டு அவரை காப்பாற்றக்கூறியுள்ளார்.
பதற்றமடைந்த சிறுமியின் தாய், தனது மகளை மீட்டு டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாலை 02:45 மணியளவில் அனுமதி செய்துள்ளார். சிறுமி கவலைக்கிடமான நிலையில் இருந்தபோதும், மருத்துவர்கள் விரைந்து அவரை காப்பாற்றி இருக்கின்றனர்.
சிறுமி தப்பித்தார், காதலன் பலி
தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுமியின் காதலரான அர்ஜுன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு காதலிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை நேரில் பார்த்துள்ளார். அப்போது இரத்தக்கறைகள் இருந்ததையும் கவனித்துள்ளார். இதனால் அவருக்கு பதற்றம் ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகி மயங்கி சரிந்துள்ளார்.
அவரை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அர்ஜுனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: மனைவியுடன் சிறுவன் கள்ளத்தொடர்பு.? கழுத்தை நெரித்து கொடூர கொலை.!! பரபரப்பு வாக்குமூலம்.!!