மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிக்கு கிப்ட் வாங்க ஏடிஎம்மில் நூதன திருட்டு; சிறார்களின் அதிர்ச்சி செயல்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று ஏடிஎம்-க்கு வந்த 2 சிறார்கள், அதில் இருந்த பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து இருக்கின்றனர்.
திருட்டில் ஈடுபட்ட சிறுவன் சுபம், சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலிக்கு அவர் பரிசுகொடுக்க நினைத்த நிலையில், பரிசு வாங்கும் அளவு பணம் இல்லை. இதனால் திருட்டு பணத்தில் காதலிக்கு பரிசு கொடுக்கலாம் என அவர் எண்ணியுள்ளார்.
இதையும் படிங்க: பூரி பிரியர்களா நீங்கள்? நெளிந்த புழுவால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!
புதுமையாக யோசித்து திருடிய சிறுவன்
இதனையடுத்து, தனது நண்பருடன் சேர்ந்து சிறுவன் பெபிகால் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் பயன்படுத்தி பணத்தை திருடி இருக்கிறார். அதாவது, சிறுவன் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை பணம் கொடுக்கும் பகுதியில் ஒட்டி இருக்கிறார்.
ప్లాస్టిక్ పట్టీని పెట్టి ఏటీఎంలో డబ్బులు చోరీ చేస్తున్న మైనర్లు
— Telugu Scribe (@TeluguScribe) July 23, 2024
వరంగల్ జిల్లాలో బట్టల షాపులో పనిచేయడానికి ఉత్తరప్రదేశ్ నుండి వచ్చిన శుభం, అతని గర్ల్ ఫ్రెండ్ జల్సాల కోసం ఏటీఎంలో డబ్బులు వచ్చే దగ్గర ప్లాస్టిక్ పట్టీని పెట్టి ఫేవిక్విక్ తో అంటించి వెళ్లేవారు.. డబ్బులు విత్ డ్రా… pic.twitter.com/z8523DOmVm
விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்
ஏடிஎம்க்கு வருவோர் பணம் இல்லை என வெளியேறிய பின்னர், சிறுவன் பணத்தை எடுத்துச் சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. தங்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் மாயமானது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுவர்களின் அதிர்ச்சி செயல் அம்பலமானது.
விசாரணைக்கு பின்னர் சிறுவன் சுபத்தை கைது செய்த அதிகாரிகள், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் கைது செய்தனர். சிறுவனின் காதலிக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உறங்கியபடி உயிரைவிட்ட 3 பிஞ்சுகள்; வீடு இடிந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்.!