காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வேலை பார்த்தபடி நொடியில் பறிபோன உயிர்; வங்கி மேலாளருக்கு நடந்த சோகம்..! கேமிராவில் பதிவான காட்சிகள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் குமார் ஷிண்டே (வயது 31). இவர் எச்.டி.எப்.பி வாங்கிக்கிளையில், அக்ரி பொதுமேலாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தவறாது தனது பணிக்கு சென்றுவரும் இயல்பை கொண்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 19ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்றவர், தனது பணிகளை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயம் அவர் திடீரென மயங்கி சரிந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்பட்டு முன்னாள் இராணுவ வீரர் மரணம்; கேமிராவில் பதிவான இறுதி நொடிகள்.. கலங்கவைக்கும் காட்சி.!
மாரடைப்பால் பரிதாப பலி
மேலும், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து, மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மேலாளரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரின் மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த காணொளியும் வெளியாகி வைரலாகி வருகிறது.
उत्तर प्रदेश : महोबा जिले के HDFC बैंक में मैनेजर राजेश शिंदे (38 वर्ष) की लैपटॉप पर काम करते–करते मौत हो गई। साथियों ने CPR दिया, लेकिन कुछ नहीं हुआ। pic.twitter.com/Xz2ItozDjj
— Sachin Gupta (@SachinGuptaUP) June 26, 2024
இதையும் படிங்க: ஓட்டுனரின் உறக்கத்தால் உருண்டு உருக்குலைந்த கார்; ஒருவர் பலி., 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!