மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் நண்பருடன் தனிமையான இடத்திற்கு சென்ற இளம்பெண்.. 3 பேர் கும்பலால் பலாத்காரம்.!
தனிமையான இடத்தில் இருந்த ஜோடியில், பெண்ணை மூவர் கும்பல் பலாத்காரம் செய்தது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இரவு 10 மணிக்கு மேல் தனியே சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டில் கொள்ளை, இளம்பெண் பலாத்காரம்.. குழந்தையை கொள்வதாக மிரட்டி துயரம்.!
தங்களின் திட்டப்படி ஜோடி அங்குள்ள போப்தேவ் கர் பகுதியில் சந்தித்துள்ளது. அங்கு மறைவான பகுதியில் இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம் அங்கு வந்த 3 பேர் கும்பல், பெண்னுடன் இருந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கி இருக்கிறது.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்பின் பெண்ணை மறைவுப்பகுதியின் வேறொரு இடத்திற்கு தூக்கிச் சென்ற கும்பல், மூவராக சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 8 தனிப்படைகள் அமைத்து பெண்ணிடம் அத்துமீறிய நபர்களை தேடி வந்தனர். பெண்ணின் ஆண் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து பாலியல் புகார்கள்ஏற்கனவே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் 2 சிறுமிகள் பள்ளி கழிவறையில் பலாத்காரம் செய்யப்பட்டது, புனேவில் பள்ளிப்பேருந்து ஓட்டுனரால் வேனிலேயே 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என கடந்த 30 நாட்களுக்குள் அடுத்தடுத்த அதிரவைக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த பேரம்.!! அதிர்ச்சி தகவல்.!!