மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் சுட்டுக்கொலை; டெல்லியில் பயங்கரம்.. சிறார்கள் பகீர் செயல்.!
கொல்கத்தா மருத்துவரின் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் நடந்துவரும் நிலையில், டெல்லியில் மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஜைத்புர் பகுதியில் நிமா என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு நேரத்தில் மருத்துவர்கள் ஜாவேத் அக்தர், செவிலியர் கஜால பிரவீன், முகம்மத் காமில் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: தாயுடன் உறங்கிய 3 வயது சிறுமி பலாத்காரம்; 25 வயது இளைஞன் அதிர்ச்சி செயல்..!
நள்ளிரவு நேரத்தில் காலில் சிறிய அளவிலான காயத்துடன் 17 வயதுடைய சிறார்கள் மருத்துவமனைக்கு வந்து காயத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவர், செவிலியர் தரப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் சிறார்கள் இருவரும் தங்களின் மருத்துவ பரிசோதனை சீட்டை வாங்கச் சென்றுள்ளனர்.
மருத்துவர் சுட்டுக்கொலை
அச்சமயம் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட நிலையில், பதறியபடி செவிலியர்கள் சென்றுள்ளனர். அப்போது, சிறார்கள் இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். மருத்துவரின் அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு 55 வயதுடைய மருத்துவர் கொல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது.
காவல்துறை விசாரணை
உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து, 2 சிறார்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் 31 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனிடையே, மருத்துவமனைக்கு உள்ளேயே மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: சந்திசிரிக்கும் தலைநகரின் சட்டம்-ஒழுங்கு; துப்பாக்கிகளை ஏந்தி சரமாரி துப்பாக்கிசூடு.!