இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோகம்.. பருவமழை தொடங்கும் முன்னே பரிதாபம்.!



in Tamilnadu Today 4 Electrocution Death due to Rain 


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 7 நாட்களுக்கு கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, புதுக்கோட்டை, மதுரை உட்பட பல நகரங்களில் நேற்று முதலாக நல்ல மழை வெளுத்து வாங்கியது. 

வடகிழக்கு பருவமழையும் தொடங்கவுள்ளதால், மின் இணைப்புகள் சோதனை செய்தல், அதனுடன் இருக்கும் மரக்கிளைகளை அகற்றுதல் போன்றவற்றுக்கு மின்வாரியத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. 

Electrocution

மின்சாரம் தாக்கி சோகம்

இந்நிலையில், இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், பத்மநாபபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த ஐயா கண்ணு மீன்பிடிக்க சென்றபோது உயிரிழந்தார். 

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 வயது சிறுவன்; அலட்சியத்தில் இருந்து மீண்டுவராத அதிகாரிகள்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, ராமநத்தம் கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி காயத்ரி, வீட்டின் எதிரில் இருக்கும் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச்சென்றபோது மின் கம்பி அறுந்து விழுந்ததை மதித்து பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரை சேர்ந்த குமரேசன், வீட்டின் கழிவறையில் அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் பலியானோரின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 5 வயது குழந்தையின் உயிருக்கு எமனான மின்கம்பம்; இருகன்குடியில் நடந்த சோகம்.. ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபம்.!