கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
"500 ரூபாய் தருவோம் வீட்டுக்கு வா.." 50 வயது பெண் கூட்டு பலாத்காரம்.!!
தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில், பேருந்து நிலையத்தில் காத்திருந்த 50 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டு வேலைக்கு அழைத்த மர்ம நபர்கள்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் பேருந்து நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து துணி துவைத்துக் கொடுத்தால் 500 ரூபாய் தருவதாக கூறியிருக்கின்றனர். இவர்களது பேச்சை நம்பி அந்தப் பெண்ணும் வீட்டு வேலைக்காக சென்றிருக்கிறார்.
கூட்டு பாலியல் வன்புணர்வு
இந்நிலையில் அவர்கள் வீட்டை அடைந்ததும் அந்த 3 பேரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன் பிறகு அங்கிருந்து மீண்டு வந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல்துறையில் புகார் செய்தார்.
இதையும் படிங்க: மீன், கோழி, மருத்துவ கழிவுகளுடன் தமிழகம் வந்த கேரள லாரி.. அதிரடி காட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.!
காவல்துறை விசாரணை
அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் நின்ற பெண் வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத் நகரில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் பெட்ரோல் பங்கில் அடாவடி; லைட்டரை பற்றவைத்து பதறவைத்த குடிமகன்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!