திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்; திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விக்ரபாத் மாவட்டம், தண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் நீலம் தட்டு. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். நீலம் அங்குள்ள கல் உடைப்பு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். அவரின் மனைவி கூலித்தொழிலாளியாக இருக்கிறார்.
தொட்டிலில் உறங்கிய குழந்தை
தம்பதிகள் இருவருக்கும் 5 மாதமாகும் பாபுசாய் பச்சிளம் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், நேற்று நீலத்தின் மனைவி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரின் 5 மாத குழந்தை தந்தையின் பராமரிப்பில் யிருந்த நிலையில், குழந்தையை உறங்கவைத்துவிட்டு அவசர வேலையாக அவர் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: போதையில் நாயை அடித்தே கொலை செய்த நபர்; கட்டிவைத்து நாய்க்கு நடந்த பெருந்துயரம்.!
இவர்கள் தங்கியிருக்கும் இடமும், ஆலையும் அருகருகே இருக்கிறது என்பதால் உரிமையாளர் அழைத்தால் நேரில் சென்று வருவதை நீலமும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனிடையே, நேற்று நீலம் தனது குழந்தையை தொட்டிலில் உறங்கவைத்துவிட்டு ஆலைக்கு சென்றுள்ளார்.
குழந்தையை கடித்துக் குதறிய நாய்
வீட்டில் குழந்தை உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், குழந்தையை தெருநாய் ஒன்று கடுமையாக தாக்கி இருக்கிறது. இதனால் குழந்தை துடிதுடித்து உயிரிழந்துள்ளது. வீட்டிற்கு வந்த நீலம் குழந்தையின் தொட்டிலில் ரத்தம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச்சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
தற்போது இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாய் கடுமையாக குழந்தையை தாக்கிய தடயங்கள், கழுத்தில் கடிக்கப்ட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை; தந்தை அதிர்ச்சி செயல்.!