கார் ஒட்டியதற்கு தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக ரூ.1000 அபராதம் விதிப்பு; பரிதவிப்பில் வாகன ஓட்டி.!



in UP Jhansi Rs 1000 Fine for Riding car Without Helmet 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தனது ஆடி மாடல் காரில் பயணம் செய்துள்ளார். அவருக்கு அம்மாநில காவல்துறை சார்பில், நீங்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக அபராதம்

இதனால் அதிர்ந்துபோனவர், தனது புகாரை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் பொருட்டு காரில் தலைக்கவசம் அணிந்து வந்து போக்குவரத்து காவலரை சந்தித்து புகார் கூறினார். அதிகாரிகளோ புகாரை பெற்றுக்கொண்டு, தற்போது தாங்கள் அனைவரும் தேர்தல் பணிகளில் இருக்கிறோம். 

இதையும் படிங்க: உடல் உறுப்பு செயலிழந்து கர்ப்பிணி பெண் பலி: பலாத்காரத்தால் அடுத்தடுத்து நடந்த துயரம்.!

புகாரை தேர்தலுக்கு பின் கவனிப்பதாக அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஆதலால், தேர்தல் நிறைவுபெற்றதும் உங்களின் கோரிக்கையை கவனிக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதனால் தனது புகாருக்கான நியாயம் கிடைக்கும் என பாதிக்கப்பட்டவர் பகதூர் சிங் பரிஹார் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து செல்பி எடுத்து அனுப்பிய கணவன்; அடுத்தடுத்து நடந்த பயங்கரத்தால் கதறும் உறவினர்கள்.!