11 வயது சிறுமி சொந்த தந்தையால் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் தகவல்.!



in Uttar Pradesh 11 Year Old Girl Abused by Own Father 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் நபருக்கு, திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 11 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் தாய் வெளியே சென்றுள்ளார். அப்போது, சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். அச்சமயம், சிறுமியின் தந்தை, தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: 5 வயது சிறுமி உடலை பல பாகமாக துண்டித்து கொடூர கொலை; தந்தை வெறிச்செயல்.. அதிரவைக்கும் காரணம்.!

Uttar pradesh

பாலியல் வன்கொடுமை

மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி தந்தையின் செயல் குறித்து கூறியுள்ளார். 

இதனையடுத்து, சிறுமியின் தாய் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் சிறுமியி தந்தையை கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஓரினசேர்க்கை பெண்ணுடன் திருமணம் செய்யமாட்டேன் - இறுதி நேரத்தில் அம்பலமான உண்மை.. மணமகன் ஷாக்.!