மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம்; பெற்றோர் அதிர்ச்சி தகவல்..! காரைக்காலில் அதிர்ச்சி.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், நிரவி, ஹவுஸ் காலனியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 13). இவர் தனது சக நண்பருடன் விளையாடச்சென்று மாயமாகி இருக்கிறார்.
சிறுவனை காணாது பெற்றோர் பரிதவித்து தேடிவந்த நிலையில், அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: டிஜேவின் நெஞ்சில் பாய்ந்த குண்டு.. பாரில் இரத்தவெள்ளத்தில் சுட்டுக்கொலை.! பதறவைக்கும் வீடியோ உள்ளே.!!
13 வயது சிறுவன் கொலை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து நடந்த விசாரணையில், அப்பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனின் தாயால் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்கையை காக்க முயன்ற சிறுவன் கொலை?
இதனிடையே, சிறுவனின் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற சிறுவனை தட்டிக்கேட்ட காரணத்தால் கொலை நடந்துள்ளது என உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
கொலையாளியான சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் தாயார் கைது செய்யப்பட்டாலே உண்மை தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 50 வயது நபர் குத்திக்கொலை; பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததால் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!