மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமண விவகாரத்தில் மச்சான் கொடூர கொலை; பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பகீர் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டவா மாவட்டம், சிவில் லைன் காவல் எல்லைக்குட்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர் நீரஜ் மௌரியா. இவரின் மைத்துனர் மோனு யாதவ். இவர்கள் இருவரும் சம்பவத்தாண்டன்று இரயில் நிலையத்திற்கு வெளியே இருக்கும் தேநீர் & சிற்றுண்டி கடையில் மேகி வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர். பின் ஒருமணிநேரம் அங்கேயே பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதனிடையே, அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த நீரஜ் மௌரியா, மோனு யாதவை 8 முறை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின் உடலை நடுரோட்டில் எடுத்து வந்து வீசினார். இந்த சம்பவத்தை நேரில்கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: அலைபாயுதே பாணியில் திருமணம்.. விடுதி அறையில் மனைவி கொடூரமாக அடித்தே கொலை.. காரணம் என்ன?.!
குற்றவாளி கைது
கடைக்குள் நடந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர், இவர்களை தடுக்க முயற்சித்தபோதும் பலனில்லை. தகவல் அறிந்து வந்த காவல்துறைனர், கொலையான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நீரஜ்ஜை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதிர்ச்சிதரும் உண்மை அம்பலமானது.
காதல் திருமணம்
அதாவது, நீரஜ் மௌரியா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இதே கிராமத்தில் வசித்து வந்த மோனுவை, தனது நர்சரியில் வேலைக்கும் வைத்துள்ளார். வேலைக்கு வந்த மோனு நீரஜ்ஜின் தங்கை மீது காதல் வயப்பட்ட, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மோனுவின் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை.
மேலும், நீரஜும் தனது தங்கையின் வாழ்க்கையை நினைத்து வருந்தி இருக்கிறார். நீதிமன்றம் வரை சென்றும் இவ்விவகாரத்தில் தீர்வு எட்டப்படாத நிலையில், மோனு - நீரஜ் இடையே அவ்வப்போது மனவருத்தம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் பேசத்தொடங்கியபோது ஏற்பட்ட தகராறில், படுகொலை சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: புதுத்துணி கேட்டது குத்தமா?.. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்.!