திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூரத்தின் உச்சம்.!! 13 வயது மகள் கூட்டு பாலியல் பலாத்காரம்... தந்தை, நண்பர் கைது.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி, தந்தை மற்றும் தந்தையின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர செயல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்த சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் நண்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மகள் கடத்தப்பட்டதாக புகார்
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 13 வயது மகளை சிலர் கடத்தி விட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் 13 வயது சிறுமி, அவரது தம்பி மற்றும் நண்பன் ஆகியோரை மீட்டனர். மேலும் சிறுமியிடம் நடத்திய விசாரணையின் போது அவர் தெரிவித்த தகவல் காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
தந்தையின் புகாரை தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் சிறுமி மற்றும் சிறுவர்களிடம் கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சிறுமி தனது தந்தை மற்றும் தந்தையின் நண்பர் ஆகிய இருவரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால் அந்தக் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக தனது நண்பன் மற்றும் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடியதாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!
கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் அவரது நண்பர்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் நண்பர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத கருக்கலைப்பு... துடி துடித்து இறந்த இளம் பெண் .!! மாமியார், கணவன் கைது.!!