மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரடைப்பு ஏற்பட்டு முன்னாள் இராணுவ வீரர் மரணம்; கேமிராவில் பதிவான இறுதி நொடிகள்.. கலங்கவைக்கும் காட்சி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் பல்பிந்தார் சாவ்டா. இவர் இன்று தனியார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
இராணுவ சீருடையுடன் அவர் அங்கிருந்தவர்களுடன் தேசபக்தி பாடலை பாடிக்கொண்டு இருந்தபோதே, திடீரென உடல்நலம் குன்றி மயங்கி சரிந்தார்.
இதையும் படிங்க: "சில தேவதைகளுக்கு இறகுகள் இருப்பதில்லை, ஸ்டெதகோப் தான்" - 6 வயது சிறுவனின் உயிரை கைப்பற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டு.!
மாரடைப்பு ஏற்பட்டு சோகம்
தேசபக்தி பாடல் ஒலித்துக்கொண்டு இருந்த வேளையில், அனைவரும் அதனுடன் மெய்மறந்து இருந்தனர். பின் இவர்கள் சுதாரித்து பல்பிந்தார் எழுந்துகொள்ளாமல் இருப்பதை கவனித்து இருக்கின்றனர்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது மாரடைப்பு மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விசயம் தொடர்பான உருக்கமான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
साइलेंट अटैक, इंदौर में देशभक्ति का गीत गाते गाते रिटायर्ड फ़ौजी बलबिंदर छावड़ा को आया जानलेवा दिल का दौरा, बच्चे तालियाँ बजाते रहे, अस्पताल ले जाते दम तोड़ @VistaarNews pic.twitter.com/CoJGyUGuQR
— Brajesh Rajput (@drbrajeshrajput) May 31, 2024
இதையும் படிங்க: பணிக்கு வரும் வழியில் சோகம்; காரை ஓட்டியபோதே மாரடைப்பால் பிரிந்த உயிர்..! மறையும்போதும் மனிதநேயம்.!